"ராஜபக்சேவின் அரசியலை கடைப்பிடிப்பேன்" - அதிபர் வேட்பாளர் அதிரடி

மகிந்த ராஜபக்சவின் அரசியல் கொள்கையை கடைப்பிடிப்பேன் என இலங்கை அதிபர் வேட்பாளர் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். அந்நாட்டின் தலைநகர் கொழும்புவில் இலங்கை பொதுஜன முன்னணி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பேசிய நமல் ராஜபக்சே, பொருளாதார நெருக்கடிக்கு நிச்சயம் தீர்வு காணப்படும் என்றார். மேலும், அடுத்து வரும் 10 ஆண்டுகளில் நாட்டின் மொத்த உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகப்படுத்த வேண்டும், மக்களால் தாங்கிக் கொள்ள கூடிய நியாயமான வரி கொள்கை நடைமுறைபடுத்தப்படும் எனவும் உறுதி அளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com