சென்னையில் கூகுளால் 7 பெண்களுக்கு நேர்ந்த உச்சகட்ட விபரீதம்..முறிந்த கால் எலும்பு..வடமாநில பெண் கைது

சென்னையில் கூகுளால் 7 பெண்களுக்கு நேர்ந்த உச்சகட்ட விபரீதம்..முறிந்த கால் எலும்பு..வடமாநில பெண் கைது
Published on

சென்னை அசோக் நகரில், வீட்டு வாசலில் உறங்கிய பெண்கள் மீது காரை ஏற்றிய வட மாநில பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிராவை சேர்ந்த வைஷாலி என்பவர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக் ஸ்கூலில் படிக்கும் தன் மகளை அழைத்து வரச் சென்றதாக கூறப்படுகிறது. கூகுள் மேப்பை பார்த்து காரை இயக்கிய வைஷாலி, சென்னை அசோக் நகரின் முட்டுச் சந்தில் சிக்கி கொண்ட நிலையில், அங்கு வீட்டு வாசல் முன் படுத்திருந்த ஏழு பெண்களின் மீது காரை ஏற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், இரண்டு பேர் கால் எலும்பு முறிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், பெண்ணை கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com