Mahalaya Amavasai | வேப்ப மரம் அடியில் தொப்புள் கொடியோடு திகில் உருவம் - பின்னணியில் மகாளய அமாவாசை?

x

ராசிபுரம் அருகே 6 மாதமே ஆன, ஆண் குழந்தையை தொப்புள் கொடியுடன் வேப்பமரத்தின் அடியில் வீசப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. க.வெள்ளாளப்பட்டி பகுதியில் கட்டிடப் பணிக்காக கொட்டி வைத்து இருந்த மணலுக்குள், 6 மாத குறைப்பிரசவமாக பிறந்த குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மகாளய அமாவாசை தினத்தை ஒட்டி, நரபலி கொடுக்கப்பட்டதா? அல்லது கருக்கலைப்பு செய்யப்பட்டு புதைக்க முயற்சிக்கப் பட்டதா? என்ற பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவில் 2 பேர் நள்ளிரவில் அப்பகுதிக்குள் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்