மகா கும்பமேளாவில் சிதறி கிடந்த உயிரிழந்தவர்களின் ஆடைகள் - அதிர்ச்சியை கிளப்பிய அகிலேஷ் யாதவ்
மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை எவ்வளவு? என மக்களவையில் அகிலேஷ் யாதவ் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். நெரிசலில் சிக்கியோரின் ஆடைகள், காலணிகள் சிதறிக் கிடந்ததாகவும், அவற்றை ஜேசிபி மூலம் அள்ளப்பட்டு டிராக்டர்களில் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறிய அவர், உயிரிழப்பு எண்ணிக்கை மறைக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், உண்மை விவரத்தை வெளியிட்டு, பாதுகாப்பு ஏற்பாட்டை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
Next Story