லாட்ஜில் உல்லாசம்.. கடைசியில் கள்ளக்காதலன் கேட்ட கேள்வி.. காதலியின் சோக முடிவு
லாட்ஜில் உல்லாசம்.. கடைசியில் கள்ளக்காதலன் கேட்ட கேள்வி.. காதலியின் சோக முடிவு
- மாமல்லபுரத்தில், தனியார் விடுதியில் தங்கியிருந்தபோது, கள்ளக் காதலன் தகராறு செய்ததால் இளம்பெண் தூக்கிட்டுத் த*கொலை செய்து கொண்டார்.
- மதுராந்தகம் அருகே உள்ள சித்திரவாடி கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவருக்கும், கணவரை பிரிந்து வாழும் கூடுவாஞ்சேரியில் வசித்து வந்த சங்கீதா என்பவருக்கும் தகாத தொடர்பு ஏற்பட்டுள்ளது.
- ஜெயராஜுக்கு ஏற்கெனவே திருமணமாகி இருந்தாலும், சங்கீதாவை அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். இருவரும் மாமல்லபுரத்திற்குச் சென்று, அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.
- அப்போது, மது போதையில் இருந்த ஜெயராஜ், சங்கீதா பலருடன் செல்போனில் பேசுவதாகக் கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.
- அதன்பிறகு அவர் உணவு வாங்க வேளியே சென்ற நேரத்தில், தனது நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனமுடைந்த சங்கீதா மின்விசிறியில் தூக்கிட்டுத் த*கொலை செய்து கொண்டார்.
- தகவல் அறிந்து வந்த போலீசார், சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, ஜெயராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
