கடலில் மிதந்து வந்த ரூ.117 கோடி மதிப்பிலான போதைப் பொருள் மீட்பு

மாமல்லபுரம் அருகே கடலில் இருந்து 117 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் மிதந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலில் மிதந்து வந்த ரூ.117 கோடி மதிப்பிலான போதைப் பொருள் மீட்பு
Published on

* செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே உள்ள கொக்கிலமேடு கடற்கரையில் சீலிடப்பட்ட தகர டிரம் ஒன்று மிதந்த நிலையில் கரை ஒதுங்கியது.

* எண்ணெய் அல்லது டீசல் இருக்கலாம் என நினைத்து அவற்றை பிரித்து பார்த்த போது ரீபைண்ட் சைனீஸ் டீ என அச்சிடப்பட்ட பொட்டலங்கள் இருந்தன.

* இதனை பார்த்த மீனவர்கள் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், அவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

* சென்னையில் உள்ள ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு சோதனை செய்ததில் அது மெத்தாம்பிடைமின் என்ற போதைப் பொருள் என தெரியவந்தது.

* இதனால் போலீசார் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். கைப்பற்றப்பட்ட 78 கிலோ கொண்ட அந்த போதைப் பொருளின் மதிப்பு மட்டும் 11 கோடி ரூபாய் என்கின்றனர்.

* மலேசியா, இந்தோனேஷியா, வியட்நாம் உள்ளிட்ட இடங்களில் இந்த வகையான போதைப் பொருளை சட்டவிரோதமாக தயாரிப்பதாகவும், கடல் வழியாக கடத்த முயன்ற போது கடலோர காவல் படை போலீசாருக்கு பயந்து அதனை கடலில் வீசிவிட்டு சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

* போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில் கடத்தலில் ஈடுபட்டது யார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com