மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் 2 நாட்கள் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேச்சு நடத்த உள்ளனர். அப்போது இருநாட்டு தலைவர்களும் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ச்சுணன் தபசு, வெண்ணை உருண்டை கல் ஆகிய பாரம்பரிய நினைவு சின்னங்களை சுற்றிப்பார்க்க உள்ளனர். கடற்கரை கோயிலில் நவீன முறையில் கிரானைட் கற்களால் நடைபாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பெங்களூரில் இருந்து கொண்டு வரப்பட்ட பசுமை புல்வெளிகள் தரையில் அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.மேலும் வெண்ணை உருண்டை பாறை பகுதி முழுவதும் பசுமை புல்வெளிகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஓரிரு நாளில் முடியும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.இதனிடையே கடற்கரை கோயில் நுழைவு வாயிலில் தியான கோலத்தில் புத்தர் சிலை அமைக்கவும்ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது,