மகா மாரியம்மன் கோவில் - சித்திரை திருவிழா நிறைவு நாள் கோலாகலம்

x

மகா மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு நாள் கோலாகலம்

குளித்தலை மகா மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் நிறைவு நாளில் வான வேடிக்கைகளுடன் மேளதாளங்கள் முழங்க கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

கரூர் மாவட்டம் குளித்தலை மகா மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மே 4 -ல் கம்பம் ஊன்றுதல் மற்றும் பூச்சொரிதல் நிகழ்வுடன் துவங்கி நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து அம்மன் உற்சவர் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையடுத்து சித்திரை திருவிழாவின் நிறைவு நாளில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்