Magalir Urimaithogai | உரிமைத் தொகை ரூ.5000 - பெண்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுகவினர்

உரிமைத் தொகை ரூ.5000 - பெண்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுகவினர்

உரிமைத் தொகை ரூ.5000 - பெண்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுகவினர் சென்னை அடுத்த பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் மகளிர் உரிமைத் தொகை 5000 ரூபாய் பெற்ற பெண்களுக்கு, எம்.எல்.ஏ கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வை பட்டாசு வெடித்தும், மேள தாளத்துடனும் திமுகவினர் கொண்டாடினர். குரோம்பேட்டை காமராஜர் நகர், கண்ணபிரான் தெரு, பேருந்து நிலையம் பகுதிகளில் மகளிர் உரிமைத்தொகை பெற்ற பெண்களுக்கு கருணாநிதி எம்.எல்.ஏ இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதில், மண்டல குழுத் தலைவர் ஜோசப் அண்ணாதுரை மற்றும் திமுக நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று பெண்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

X

Thanthi TV
www.thanthitv.com