தென்னிந்திய அனைத்து ஊடக 2-வது உச்சி மாநாடு - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்

தென்னிந்திய அனைத்து காட்சி, அச்சு, டிஜிட்டல் போன்ற அனைத்து பரிணாம ஊடகங்களின் இரண்டாவது உச்சி மாநாடு சென்னை தனியார் விடுதியில் தொடங்கியுள்ளது.
தென்னிந்திய அனைத்து ஊடக 2-வது உச்சி மாநாடு - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்
Published on
தென்னிந்திய அனைத்து காட்சி, அச்சு, டிஜிட்டல் போன்ற அனைத்து பரிணாம ஊடகங்களின் இரண்டாவது உச்சி மாநாடு சென்னை தனியார் விடுதியில் தொடங்கியுள்ளது. இதனை தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாாண்டியராஜன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், உலக அரங்கில் ஊடகத்துறையில் இந்தியா 10 -வது இடத்தில் உள்ளதாகவும், இதில் தென்னிந்தியாவை சேர்ந்த 5 மாநிலங்கள் மிக முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறினார். ஊடகத்துறையில் தமிழகம் மிகப்பெரிய பங்கு வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஆண்டில் ஊடகத்துறையின் வருமானம் 15 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com