மதுரவாயல் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ஜீவா மற்றும் சதீஷ். இரட்டை சகோதரர்களான இருவரும், ஆந்திராவில் உள்ள சட்டக்கல்லூரியில் தங்கி சட்டம் படித்து வந்த நிலையில், சம்பவத்தன்று சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருவரும் தங்களின் நண்பருடன் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது, எதிரே வந்த கண்டெய்னர் லாரி மோதி மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், இரட்டை சகோதரர்களில் ஒருவரான ஜீவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மற்ற இருவரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார், லாரி ஓட்டுநரான அஸத் அன்சாரி என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.