போலி பட்டா மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சி - ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க ஒருவர் முயற்சி

போலி பட்டா மூலம் தமது நிலத்தை மோசடி செய்ய முயல்வோரை தடுக்க வேண்டும் என்று கூறி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலி பட்டா மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சி - ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க ஒருவர் முயற்சி
Published on
போலி பட்டா மூலம் தமது நிலத்தை மோசடி செய்ய முயல்வோரை தடுக்க வேண்டும் என்று கூறி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்துக்கு அலங்காநல்லூரை அடுத்த தாதகோனாம்பட்டியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர் தமது மனைவியுடன் வந்தார். அப்போது, தாம் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை திடீரென தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்த போலீசார் உடலில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். அப்போது, தமது நிலத்தை போலிப் பட்டா மூலம் பறிக்க முயல்வதாகவும், எம்.எல்.ஏ.வின் பெயரைக் கூறும் சிலர், அதிகாரிகள் துணையுடன் தம்மை மிரட்டுவதாக புகார் கூறியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com