மதுரையில் இளைஞர் ஆணவப்படுகொலை?.. கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு

மதுரையில் இளைஞர் ஆணவப்படுகொலை?.. கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு
Published on

காதல் விவகாரத்தில் இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதாக கூறி, இளைஞரின் உறவினர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்தவர் அழகேந்திரன். 21 வயதான இவர் படித்து முடித்து விட்டு வேலை தேடி வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த மாற்று சமூக பெண் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி மதுரை கள்ளிக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற அழகேந்திரன், திடீரென மாயமாகி இருக்கிறார். விசாரணையில், பெண்ணின் மாமன் முறையான பிரபாகரன், தன் முறைப்பெண்ணை அழகேந்திரன் காதலித்து வருவதை அறிந்து ஆத்திரத்தில் இருந்தது தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி அழகேந்திரனை தனியே அழைத்துச் சென்ற பிரபாகரன், அவரை கொன்று கள்ளிக்குடி அருகேயுள்ள வேலாம்பூர் கண்மாயில் சடலமாக வீசியது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் பிரபாகரனை கைது செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதாக கூறி அவரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com