கோவையை சாய்த்து மதுரை முதல் வெற்றி

x

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் 8-வது லீக் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கோவை அணியை வீழ்த்தி மதுரை அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற மதுரை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கோவை அணி, 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி, 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது. அரவிந்த் அரை சதம் அடித்தார். கேப்டன் சதுர்வேத் 46 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்