மதுரை : 3 மாதங்களாக நீடிக்கும் குடிநீர் தட்டுப்பாடு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை அடுத்த வெள்ளையம்பட்டி கிராமமக்கள், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை : 3 மாதங்களாக நீடிக்கும் குடிநீர் தட்டுப்பாடு
Published on

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை அடுத்த வெள்ளையம்பட்டி கிராமமக்கள், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த மூன்று மாதங்களாக முறையாக குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், தங்கள் பகுதியில் சாக்கடை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனவும் குற்றம்சாட்டினர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பாலமேடு பேரூராட்சி அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்ததை தொடர்ந்து, மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com