வாகன சோதனையில் தாக்கப்பட்ட இளைஞர்கள் : சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு

மதுரையில் போலீசார் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாகன சோதனையில் தாக்கப்பட்ட இளைஞர்கள் : சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு
Published on

மதுரையில் போலீசார் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை சிம்மக்கல் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்ற வாலிபர்களை லத்தியால் தாக்கியதில், தங்கவேல் என்பவரது மகன் விவேகானந்தகுமார் சம்பவ இடத்திலேயே மயங்கியுள்ளார். வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு வாலிபருக்கு சிறிது காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆம்புலன்ஸ் மூலமாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேகானந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து போலிஸாரை கண்டித்தும், உரிய விசாரணை நடத்த கோரியும் இளைஞரின் உறவினர்கள் மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com