

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை பகுதியில் வசித்து வரும் நரிக்குறவ இன மக்கள் உணவு கிடைக்காமல் சிரமப்படுவதாக தந்தி டிவியில் செய்தி வெளியாகி இருந்தது. அதனை பார்த்த வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், அவர்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களை உடனே வழங்கிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, மளிகைப் பொருட்களை அதிகாரிகள் நேரில் சென்று வழங்கினர்.