டங்ஸ்டன் திட்டம் ரத்து - மகிழ்ச்சியின் உச்சியில் மக்கள் சொன்ன கருத்து
மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். அரிட்டாப்பட்டி மக்கள் மலைமேல் ஏறி போராட்டம், கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம், ஒப்பாரி போராட்டம் என பல கட்ட போராட்டங்கள் நடத்தினர்.
அனைத்துக் கட்சி ஆதரவுடன் தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அரிட்டாப்பட்டி பகுதியை பல்லுயிர் பெருக்க மண்டலமாகக் கருதி டங்ஸ்டன் சுரங்க ஏல அனுமதியை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது... இதையடுத்து அரிட்டாப்பட்டி மக்கள் பட்டாசுகள் வெடித்து, நடனமாடி, இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Next Story
