

மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவிலில் 85ஆவது ஆண்டு பிரியாணி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவில் 150 ஆடுகள் மற்றும் முன்னூறுக்கும் மேற்பட்ட கோழிகள் பலியிடப்பட்டு, பிரியாணி செய்து பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.