மதுரை தீக்குளிப்பு சம்பவம் - வேறு அமைப்புக்கு மாற்ற கோரி முறையீடு

மதுரையில் தீக்குளித்து உயிரிழந்த நாராயணனின் மரண வழக்கை, வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அவசர முறையீடு செய்யப்பட்டது. நாராயணனின் மனைவி புவனேஸ்வரி தாக்கல் செய்த இந்த முறையீட்டில், சொத்துப் பிரச்சனை காரணமாகத் தங்களது குடும்பத்திற்குத் தொடர்ச்சியாகக் காவல்துறை அழுத்தம் கொடுத்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த உறவினர்களுக்கு ஆதரவாகச் சுப்ரமணியபுரம் போலீசார் செயல்படுவதால், இந்த வழக்கில் நியாயம் கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த முறையீட்டை ஏற்ற நீதிபதி புகழேந்தி, இது குறித்து மனுவாகத் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினார்....

X

Thanthi TV
www.thanthitv.com