சக மாணவரை பிளேடால் கிழித்த கொடூரம் : பள்ளி மாணவன் சாதி வெறி தாக்குதல் என புகார்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சக பள்ளி மாணவரை மற்றொரு மாணவர் பிளேடால் கிழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சக மாணவரை பிளேடால் கிழித்த கொடூரம் : பள்ளி மாணவன் சாதி வெறி தாக்குதல் என புகார்
Published on

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சக பள்ளி மாணவரை மற்றொரு மாணவர் பிளேடால் கிழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தக பையை மறைத்து வைத்து விளையாடிய போது ஏற்பட்ட மோதல் காரணமாக கோபமடைந்த மகா ஈஸ்வரன் என்ற மாணவர் சக மாணவர் சரவணக்குமாரை தகாத வார்த்தை கூறி முதுகில் பிளேடால் கிழித்துள்ளார். இதில் சரவணக்குமார் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மகா ஈஸ்வரன் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com