காணாமல் போன 10ம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை

மதுரையில் காணமல் போன பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் வைகையாற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காணாமல் போன 10ம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை
Published on

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த காளி என்பவரது மகன் யோகநாதன். அங்குள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி செல்வதாக கூறி விட்டு சென்ற யோகநாதன் வீடு திரும்பாத நிலையில், அது குறித்து போலீசில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து சிறுவனை போலீசார் தேடி வந்த நிலையில், சோழவந்தான் அருகே மேலக்கால் பகுதியிலுள்ள வைகையாற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று பார்த்த போது அது யோகநாதனின் உடல் என தெரியவந்தது. இதையடுத்து உடலை மீட்ட போலீசார், அது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போன பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com