

மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட வில்லாபுரம் ஜெல் என்ற சல்மான்கான் நெல்பேட்டை அப்துல் ரகுமான் மற்றும் முகமது அன்சாரி ஆகியோர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர். வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்ற இடங்களிலிருந்து சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றவாளிகளின் மோட்டார் சைக்கிள் கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 4 சவரன் நகைகள் மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்