Madurai | Ramraj Cotton | மதுரையில் ராம்ராஜ் காட்டனின் 6-வது ஷோரூம் திறப்பு
மதுரையில் ராம்ராஜ் காட்டனின் 6-வது பிரத்யேக ஷோரூமை மதுரை விளக்குத்தூண் ஏ.வி. துரைக்கண்ணன் நிலக்கிழார் முன்னிலையில், தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் தலைவரும், தாளாளருமான கே. ஹரி தியாகராஜன் திறந்து வைத்தார்.
இந்தியாவின் பாரம்பரியமிக்க ஆடைகளை தயாரிக்கும், முன்னணி நிறுவனமாக ராம்ராஜ் காட்டன் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த திறப்பு விழாவில் பேசிய ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர். நாகராஜன், பாரம்பரியத்தை தினசரி வாழ்வில் கொண்டு வரவேண்டும் என்பதை மனதில் வைத்து ஒவ்வொரு ஆடைகளும் தயாரிக்கப்படுவதாக தெரிவித்தார்.
Next Story
