ரஜினியின் முதல் அரசியல் மாநாட்டை மதுரையில் நடத்த வேண்டும் என மதுரையில் நடைபெற்ற ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்றத்தின் தேர்தல் சம்பந்தமான முதல் ஆலோசனை கூட்டம் மதுரை தெப்பக்குளம் பகுதியில் நடைபெற்றது. இதில், ஒய்வு பெற்ற காவல்துறை டி.எஸ்.பி., குமரவேல் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இதில், மதுரை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதியிலேயே ரஜினி போட்டியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.