மதுரை இஸ்மாயில்புரத்தை சேர்ந்த அலாவுதீன் என்பவர் தனது தாயை தட்டுவண்டியில் வைத்து ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தார். இந்த பரபரப்பான சம்பவம் குறித்து தெரிவித்த அவர், எதற்கெடுத்தாலும் மருத்துவமனையில் லஞ்சம் கேட்பதாக வேதனை தெரிவித்தார். ஸ்டெச்சர், சக்கர நாற்காலி ஆகியவற்றில் வைத்து தள்ள 500 ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டிய அவர், தன்னிடம் பணம் இல்லாததால் தட்டுவண்டியில் தாயை அழைத்து வந்ததாக கூறினார். வட மாநிலங்களில் மட்டுமே நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள், தமிழகத்திலும் அரங்கேறியது அங்கு இருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.