மதுரை ரயில்வேயில் 90% வடமாநிலத்தவர் - தமிழ் அமைப்பினர் அதிர்ச்சி

மதுரை கோட்ட அளவில் நடந்த தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 90 சதவிகிதம் பேர் வடமாநிலத்தவர்கள் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ரயில்வேயில் 90% வடமாநிலத்தவர் - தமிழ் அமைப்பினர் அதிர்ச்சி
Published on

மதுரை கோட்டத்தில் உள்ள இருப்புபாதை தொடர்பான பணியிடங்களுக்கான எழுத்துதேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வில் அதிகளவில் வடமாநிலத்தவர்களும், கேரள மாநிலத்தவர்களும் தேர்ச்சி பெற்றிருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக 572 பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 20க்கும் குறைவானர்களே என கூறப்படுகிறது. இது இளைஞர்கள், தமிழ் அமைப்பினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விளக்கமளித்துள்ள ரயில்வேதுறை தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் தேர்வில் பங்கேற்காததே காரணம் என தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com