மதுரையில் திடீர் ரெய்டு - அள்ள அள்ள கட்டுக்கட்டாக வந்த பணம் | Madurai | Raid

x

மதுரையில், நெடுஞ்சாலைத்துறை அலுவலக பொறியாளருக்குச் சொந்தமான வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். ராமநாதபுரத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை தரக்கட்டுப்பாட்டு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திங்கள்கிழமை சோதனை நடத்தி, 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து, அந்த அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றும் ரங்கபாண்டியன், தற்காலிக கணினி இயக்குநர் ஜெயசக்கரவர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ரங்கபாண்டியனுக்குச் சொந்தமான மதுரை ஆனையூரை அடுத்த எஸ்.வி.பி. நகரில் உள்ள வீட்டில் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்