போலீஸ் உடையில் வாகனங்களை வழிமறித்து வசூல் : திருமங்கலம் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கைது

மதுரை மாவட்டம் திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் போலீஸ் உடை அணிந்து வாகனங்களை மறித்து வசூல் வேட்டையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் உடையில் வாகனங்களை வழிமறித்து வசூல் : திருமங்கலம் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கைது
Published on
மதுரை மாவட்டம் திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் போலீஸ் உடை அணிந்து வாகனங்களை மறித்து வசூல் வேட்டையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். திருமங்கலம் நகர சிறப்பு சார்பு காவல் ஆய்வாளர் சுரேஷ் உசிலம்பட்டி சாலை சந்திப்பில் ரோந்து சென்ற போது, போலீஸ் உடை அணிந்த ஒருவர் வாகனங்களை வழிமறித்து பணம் பெறுவதை கண்டார். இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போது, எர்மலம்பட்டியை சேர்ந்த ராமன் என்பதும், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும் போலீஸ் உடை அணிந்து பணம் பறிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com