மதுரை : கள்ளக்காதல் விவகாரம் - சிறுவன் கொலை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை : கள்ளக்காதல் விவகாரம் - சிறுவன் கொலை
Published on

டி.கல்லுப்பட்டியை அடுத்த குச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார். இவரின் மனைவி ஆனந்த ஜோதிக்கும், ராம்குமார் சகோதர உறவுக்காரர் மருதுபாண்டியன் என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஆனந்த ஜோதியின் மகனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அச்சடைந்த கள்ளக்காதல் ஜோடி சிறுவன் தூங்கிக்கொண்டிருந்த போது கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது கொலை செய்ததற்கான தடயம் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ராம்குமார் அளித்த புகாரின் பேரில் ஆனந்த ஜோதியையும், மருதுபாண்டியனையும் போலீசார் கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com