மதுரை மெட்ரோ ரயில்... வெளியான அதிகாரப்பூர்வ தகவல் | madurai
மதுரை மெட்ரோ ரயில் திட்டம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் குறித்து பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் சித்திக் பேட்டியளித்துள்ளார். மதுரையில் அமையவுள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், மெட்ரோ வழித்தடத்திற்காக சுமார் 38 புள்ளி 21 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும் என்றும், இதில் 20 புள்ளி 23 ஹெக்டேர் நிலம் பணிமனை கட்டுமானத்திற்கு தேவைப்படும் என்றும் தெரிவித்தார்.
Next Story
