Madurai meenakshi Temple | Theft | கூட்டத்தில் கைவரிசையை காட்டிய மகாராஷ்டிரா பெண்கள்
Madurai meenakshi Temple | Theft | கூட்டத்தில் கைவரிசையை காட்டிய மகாராஷ்டிரா பெண்கள்
#madurai #meenakshiamman #meenakshiammantemple #maduraimeenakshitemple #maduraimeenakshiamman #meenakshiammankumbabishekam #thanthitv
மகாராஷ்டிரா பெண்களை கையும் களவுமாக பிடித்த போலீஸ் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், கூட்டத்தை பயன்படுத்தி திருடியதாக 4 பெண்களை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். குழந்தைகளுடன் வரும் பெண்கள் மற்றும் முதியவர்களை குறிவைத்து பர்ஸ், ஹேண்ட்பேக் உள்ளிட்டவற்றை திருடியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மஃப்டியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார், திருட்டில் ஈடுபட்டபோது 4 பெண்களையும் பிடித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் இருந்து பர்ஸ் மற்றும் ஹேண்ட்பேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், 4 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
