மதுரை மீனாட்சி கோயில் சித்திரை விழா.. புதிய அறிவிப்பு

x

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் சித்திரை திருவிழாவிற்கான மின்சார வசதி மாநகராட்சி மூலம் வழங்கப்படவுள்ளதாக மேயர் இந்திராணி மாமன்ற கூட்டத்தில் தெரிவித்தார். வீதி உலா, திருக்கல்யாணம், தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மின்விளக்குகள், மின்விசிறிகள் மற்றும் ஏசிகள் போன்ற மின்சார பொருட்கள் பயன்பாட்டிற்கு மாநகராட்சி மின்சாரம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் பயன்படுத்திய மின்சாரத்திற்கான நிலுவை தொகையை கோயில் நிர்வாகம் செலுத்தினால் மட்டுமே மின்சாரம் வழங்கப்படும் என ஆய்வுக்கூட்டத்தில் மாநகராட்சி தரப்பில் கூறப்பட்ட நிலையில், கோவில் நிர்வாகம் நிலுவைத்தொகையை செலுத்தியதால் சித்திரை திருவிழாவிற்கான மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்