Madurai Meenakshi Temple | 1,233 ஏக்கர் நிலம், 133 வீடுகள்.. மதுரை மீனாட்சி கோயில் சொத்து விவரங்கள்

x

சொத்து விவரங்களை சமர்ப்பித்த மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்துக்களை மீட்டு பாதுகாக்கவும், கோவிலை புனரமைத்து விரைவாக குடமுழுக்கு நடத்தவும் உத்தரவிடக் கோரிய வழக்கில், மனுதாரருக்கு மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு, நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவில் நிர்வாகம் சார்பில் சொத்து விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமாக 1,233 புள்ளி 98 ஏக்கர் நிலங்கள் உள்ளதாகவும், 133 வீடுகள், 108 கடைகள், ஏழுகடல் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் 157 கடைகள், கோவில் பணியாளர்களுக்கு 50 குடியிருப்புகள் என 117 இனங்கள் சொத்துகளாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்