Madurai Meenakshi | உயர்நீதிமன்ற வரலாற்றில் முதல்முறை - `தமிழில்' வெளியான தீர்ப்பு

Madurai Meenakshi | உயர்நீதிமன்ற வரலாற்றில் முதல்முறை - `தமிழில்' வெளியான தீர்ப்பு

உயர்நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக தமிழில் வெளியான தீர்ப்பு சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்ற வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, முதல்முறையாகத் தமிழில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின்போது, சமஸ்கிருதத்திற்கு இணையாகத் தமிழிலும் மந்திரங்களை ஓதக் கோரி தொடரப்பட்ட வழக்கில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரதசக்கரவர்த்தி, கும்பாபிஷேகத்தில் தமிழ் ஓதுதலின் நிலை குறித்து ஜூன் 2-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டார். வழக்கமாக உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகும் நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் நீதிபதி வெளியிட்டுள்ளார். உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாகப் போராடி வரும் வழக்கறிஞர்கள், இந்த முடிவை நெகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். நீதிபதியின் இந்த நடவடிக்கை, தமிழ் நீதித்துறை வரலாற்றில் ஒரு புதிய தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது

X

Thanthi TV
www.thanthitv.com