திருமண நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்ட 5 யானைகள் : உரிய அனுமதி இன்றி அழைத்து வரப்பட்டதாக புகார்

மதுரையில் திருமண நிகழ்ச்சிக்காக உரிய அனுமதி இன்றி 5 யானைகளை அழைத்து வந்ததாக அவற்றின் உரிமையாளர்களிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
திருமண நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்ட 5 யானைகள் : உரிய அனுமதி இன்றி அழைத்து வரப்பட்டதாக புகார்
Published on
மதுரையில் திருமண நிகழ்ச்சிக்காக உரிய அனுமதி இன்றி 5 யானைகளை அழைத்து வந்ததாக அவற்றின் உரிமையாளர்களிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மதுரை தெப்பக்குளம் பகுதியில் நடைபெற்ற திருமணத்திற்கு வந்தவர்களை வரவேற்பதற்காக யானைகள் அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டன. அது குறித்த வீடியோ ஆதாரத்துடன் வனத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட யானை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அது குறித்த அறிக்கை விரைவில் சென்னையில் உள்ள வனத்துறை தலைமை அலுவலகத்தில் தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com