Madurai | மாதம் ரூ.10,000 கொடுத்தால், ஆண்டுக்கு சுமார் ரூ.1.50 லட்சம் - கோடிக்கணக்கில் அபேஸ்..

மாதம் ரூ.10,000 கொடுத்தால், ஆண்டுக்கு சுமார் ரூ.1.50 லட்சம் - கோடிக்கணக்கில் அபேஸ்..

#Madurai | #ChitFund | #Forgery | #TNPolice | #ThanthiTV Madurai | மாதம் ரூ.10,000 கொடுத்தால், ஆண்டுக்கு சுமார் ரூ.1.50 லட்சம் - நம்ப வைத்து கோடிக்கணக்கில் அபேஸ்.. மதுரையில் அதிர்ச்சி மதுரையில் நூறாண்டு பழமையான ஜவுளிக்கடை பெயரை பயன்படுத்தி, வாடிக்கையாளர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக கணவன்-மனைவி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை கீழமாசி வீதியைச் சேர்ந்த அருண்லால் என்பவர், SRB என்ற பெயரில் ஜவுளிக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை நடத்தி வந்தார். இவர் தனது மனைவி அனிதா லாலுடன் இணைந்து, கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் மாதம் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், ஆண்டு முடிவில் 1 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறி, சுமார் 55 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக தெரிகிறது. பணத்தை திருப்பிக் கேட்டபோது, பவுன்ஸ் ஆன காசோலைகளை வழங்குவது, வழக்கறிஞர்களை வைத்து மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அருண்லால் குடும்பத்துடன் தலைமறைவான நிலையில், ஏமாற்றமடைந்த வாடிக்கையாளர்கள் SRB ஜவுளி கடையை முற்றுகையிட்டனர். மேலும், அருண்லாலிடமிருந்து தங்களது பணத்தை மீட்டுத்தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com