கடத்தப்பட்ட இரு தினங்களில் சிலைகள் மீட்பு : ஐஜி பொன்.மாணிக்கவேல் விசாரணை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பெருமாள் கோயிலில் இருந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட சிலைகள் திண்டுக்கலில் மீட்கப்பட்டது.
இதனிடையே, மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல்நிலையத்தில், மீட்கப்பட்ட சிலைகள் குறித்து ஐஜி பொன்.மாணிக்கவேல் மற்றும் தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன்
ஆகியோர் விசாரணை நடத்தினர். கோயில் நிர்வாகி மற்றும் ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில் மீட்கப்பட்ட சிலைகள் குருவித்துறை பெருமாள் கோயிலுக்கு சொந்தமானது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சிலை கடத்தல்காரர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
