மதுரையை சேர்ந்த பால்பாண்டி, மனைவி மற்றும் 2 மகள்களுடன் திருப்பூரில் வசிக்கிறார். பெயிண்டரான பால்பாண்டி, 2012ஆம் ஆண்டு கட்டிடத்தின் மீது பெயிண்ட் அடித்துகொண்டிருந்த போது தவறி விழுந்ததில் முதுகுதண்டில் படுகாயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு கால்கள் பாதிக்கப்பட்டன. தனக்கு மாற்று அறுவை சிகிச்சை கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தார். ஆனாலும் உதவி கிடைக்கவில்லை என்றும், மகளுக்கு திருமண உதவிதொகை கிடைக்கவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளார்.