வீட்டை விட்டு துரத்திய கணவன்... கோர்ட் படியேறிய மனைவி...அதிரடி காட்டிய நீதிபதி

வீட்டை விட்டு பெண்ணை துரத்திய விவகாரத்தில் பெண்ணின் சான்றிதழ்களுடன், அவரது கணவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி பாளையங்கோட்டை மகளிர் காவல்துறையினருக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்த ஜெபராணி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தனது கணவர் தன்னை வீட்டை விட்டு வெளியேற்றியதோடு, கல்வி சான்றிதழை தர மறுப்பதாகவும், எனவே அவற்றை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 27-ஆம் தேதி மனுதாரரின் கணவரை, உரிய கல்விச்சான்றிதழ்களுடன் இந்த கோர்ட்டில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டார்....

X

Thanthi TV
www.thanthitv.com