நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிக்காதது துரதிஷ்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி

நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிக்காதது துரதிஷ்டவசமானது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிக்காதது துரதிஷ்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி
Published on

ராமநாதபுரம் மாவட்டம் கனட்டான்காட்டை சேர்ந்தவர் லட்சுமி.இவருக்கு நிலமற்ற ஏழைகள் பிரிவில், அரசு கடந்த 2015-ல் 17 சென்ட் நிலம் ஒதுக்கியது. அந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்த நிலையில், அந்த ஆக்கிரமிப்பை அகற்றுமாறு வருவாய் துறை அதிகாரிகளுக்கு 2015-ல் லட்சுமி மனு அளித்துள்ளார். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், உயர் நீதிமன்றத்தில் லட்சுமி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் மனுவை பரிசீலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அதன் பின்பும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், லட்சுமி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் ,நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிக்காதது துரதிஷ்டம் எனவும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததை ஒரு வழக்கமாகவே அதிகாரிகள் வைத்துள்ளனர் என கூறினார். மேலும் மனுதாரரின் கோரிக்கையை அதிகாரிகள் 4 வாரத்தில் நிறைவேற்ற வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com