மத்திய தொல்லியியல் பட்டயப்படிப்பு விவகாரத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு - உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு

செம்மொழியான தமிழை புறக்கணித்து மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்புக்கான அறிவிப்பு வெளியிட்டதை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது

மத்திய அரசின் தொல்லியல் துறையின் தொல்லியல் நிறுவனம் உத்தரபிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம், தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலை பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய வரலாறு, தொல்லியல்துறை, மானிடவியல் மற்றும் செம்மொழிகளான சமஸ்கிருதம், பாலி, மற்றும் அரபு மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் செம்மொழியான தமிழ் புறக்கணிக்கப்பட்டு உள்ள அறிவிப்பாணையை ரத்து செய்து தமிழ் மொழியையும் இணைக்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் அழகுமணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com