"குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து

தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதால், குற்றவாளிகள் ஜாமீனில் வெளி வந்துவிடுவதாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
"குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து
Published on

27 வழக்குகளில் தொடர்புடைய மதுரை சேர்ந்த சித்திரைவேல் என்பவர் ஜாமீன் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்ற வழக்குகளில் தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதால், குற்றவாளி ஜாமீனில் வெளி வருவதாகவும், இதனால் நீதித்துறை மீது மக்கள், நம்பிக்கை இழக்க நேரிடுவதாக கருத்து தெரிவித்தார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, அரசு வழக்கறிஞரின் ஒப்புதல் பெற வேண்டும் என சட்டத்தில் சொல்லப்படவில்லை என்ற நீதிபதி, குற்றப்பத்திரிகையை 7 நாளுக்கு மேல் அரசு வழக்கறிஞர் வைத்திருக்கக்கூடாது என்று தெரிவித்தார். குறித்த காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறதா? என்பதை, குற்றவியல் துறை இயக்குனர் கண்காணிக்க நீதிபதி அறிவுறுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com