18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக் கோரிய வழக்கு - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற உத்தரவு

காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த வேதா என்ற தாமோதரன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியதாகவும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த மனு, நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com