"ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்ல பணம்" அரசு மருத்துவமனையில் ஊழியர் அட்டூழியம்.. வெளியான பகீர் வீடியோ... மதுரையில் பரபரப்பு

மதுரை மாவட்டத்தை சேர்ந்த 23 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு, கடந்த 2ம் தேதி கால்முறிவு ஏற்பட்ட நிலையில் குடும்பத்தினர் ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பெண்ணை, ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்தனர். உடனே அங்கிருந்த பணியாளர் சதீஷ் , ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்ல அவர்களிடம் பணம் கேட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது வலைதள பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து மருத்துவமனை டீன் விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது...

X

Thanthi TV
www.thanthitv.com