Madurai Fire Accident | மதுரையில் திடீரென தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மர் - பரபரப்பு காட்சிகள்
மதுரையில் மின்வாரிய துணை மின் நிலைய டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை அனுப்பானடி பகுதியில் மின்வாரிய துணை மின் நிலையம் உள்ளது. அப்பகுதியில் உள்ள வீடுகள், சிறு தொழில் நிறுவனங்கள் என ஆயிரக்கணக்கான மின் இணைப்புகளுக்கு இந்த துணை மின் நிலையத்தில் இருந்து தான் மின்விநியோகம் செய்யப்படும்.இந்நிலையில் அனுப்பானடி மின்வாரியத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக வந்த தீயணைப்பு துறையினர் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
Next Story
