மதுரை டிஎஸ்பிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

ராஜபாளையத்தில் தொழிலதிபர் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாத மதுரை டிஎஸ்பி-க்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை டிஎஸ்பிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்
Published on
ராஜபாளையத்தில் தொழிலதிபர் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாத மதுரை டிஎஸ்பி-க்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்து தகராறு காரணமாக, கடந்த 2006-ம் ஆண்டில் நடந்த இந்த கொலை வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு, அப்போதைய காவல் ஆய்வாளரும், மதுரை டிஎஸ்பி-யுமான வேணுகோபாலுக்கு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது. ஆயினும், அவர் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், வேணுகோபாலுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து, நீதிபதி பரிமளா உத்தரவிட்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com