மதுரை ரயில்வே மருத்துவமனை கொரோனா சிகிச்சை அளிக்க அனுமதி - தொற்று அதிகமானதை தொடர்ந்து நடவடிக்கை

மதுரை ரயில்வே மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மதுரை ரயில்வே மருத்துவமனை கொரோனா சிகிச்சை அளிக்க அனுமதி - தொற்று அதிகமானதை தொடர்ந்து நடவடிக்கை
Published on

மதுரை ரயில்வே மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு மருத்துவமனைகளில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகமாக அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தனது ரயில்வே மருத்துவமனையை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக பல படுக்கைகள் கொண்ட மருத்துவப் பிரிவு தனித்தனி சிறு அறைகளாக மாற்றப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த ஆக்சிஜன் வழங்கல் தொடர்பு வசதி, காற்றோட்ட வசதி, அலைபேசி மின்னூட்ட வசதி, இசை மற்றும் பொது அறிவிப்புகள் ஒலிபரப்பு கருவி, ஜன்னல்களில் உயர்ரக கொசு வலைகள் ஆகியவை நிறுவப்பட்டுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com