

மதுரை வெற்றிலைப் பேட்டையில் உள்ள பிரபல லாலா ஸ்வீட் கடை உரிமையாளர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தார். கடை உரிமையாளரான 68 வயதான தண்டபாணி ஒருவாரமா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.