மாணவிக்கு 4 வாரத்தில் கல்வி கடன் அளிக்க ஆணை : கல்லூரியில் மாணவியை மீண்டும் சேர்க்க உத்தரவு

தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு 4 வாரத்தில் கல்வி கடன் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மாணவிக்கு 4 வாரத்தில் கல்வி கடன் அளிக்க ஆணை : கல்லூரியில் மாணவியை மீண்டும் சேர்க்க உத்தரவு
Published on

தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு 4 வாரத்தில் கல்வி கடன் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஒத்தகடையை சேர்ந்த காயத்ரி என்ற மாணவி கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விமான பராமரிப்பு பொறியியல் படித்து வருகிறார். அவர் கல்வி கட்டணம் செலுத்தாததால் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார். வங்கியில் கல்வி கடன் கோரியும், மாவட்ட ஆட்சியர் குறை தீர்க்கும் முகாமில் மனு அளித்தும் பலனில்லாததால் அந்த மாணவி வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை , காயத்திரியை மீண்டும் அதே கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com